ஆன்மிகம்

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!
ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை
சனிபெயர்ச்சி, குருபெயர்ச்சி வரிசையில், தற்போது, வரும் மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜோதிர சாஸ்திரத்தின் அடிப்படையில், இந்த ராகு பெயர்ச்சி ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சிலருக்கு சவால்களையும் தருகிறது.

ராகு மற்றும் கேது, இவை நமது கர்ம பலன்களை விளைவிக்கக்கூடிய சக்திவாய்ந்த நெடிய கிரகங்கள். சுமார் 18 மாதங்களுக்கொரு முறை இவை தங்களின் இடங்களை மாற்றிக்கொண்டே வருகிறது. இந்த பெயர்ச்சி, ஒவ்வொரு மனிதரின் ஜன்ம ராசிக்கேற்ப, வாழ்க்கையில் புதுப் பாதைகளையும், நன்மைகளையும் தருகிறது. சிலருக்கு மிகவும் கஷ்டமான நாட்களையும் தருகிறது. ஒருவருக்கு ஆனந்தம், முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கலாம். அதே நேரத்தில், மற்றொருவருக்கு சோதனைகளாக இருக்கலாம்.

ஆனால் உண்மையான ஆன்மீக பார்வையில் பார்க்கும்போது, இந்த பெயர்ச்சி ஒரு சோதனையாக இல்லாமல், விழிப்புணர்வின் வாயிலாக உள்ளது. இந்த காலத்தில் நாம் introspection செய்வது, நம் தவறுகளை உணர்வது, ஆன்மிக சாதனையில் தங்களை மேலும் உயர்த்துவது அவசியமாக உள்ளது.

ராகுவின் ஆட்சி மாயை, ஆசை, சோதனைகளை பிரதிபலிக்கக்கூடும் என்பதால், கேது. தியானம், துறவி நிலை, ஞானத்தை வெளிப்படுத்தும். இவ்விரண்டும் ஒன்றாகக் கூடும் போது, நாம் வாழ்க்கையில் எந்தப் பாதையை தேர்வு செய்கிறோம் என்பதுதான் முக்கியமாக உள்ளது.

ஆகையால், இந்த ராகு-கேது பெயர்ச்சியை நாம் பயந்தோ அல்லது பதற்றத்தோடு எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால், சாந்தமான மனதுடன், தவம், ஜபம், தானம், தியானம் மூலம் அதைப் புனிதமாக மாற்றலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. உண்மையான ஆன்மிகப் பாதை, புற நிகழ்வுகளைக் கடந்து, இன்னாள் உள் ஞானத்தை அடையச் செய்கிறது.