மேஷம்:
குடும்பத்தலைவிகள், தங்கநகைகள் / வெள்ளி ஆபரணங்கள் வாங்குவார்கள். கணவர் வீட்டாரின் உறவு சீராக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் வேலைப்பளு அதிகரிக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு, வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவ மணிகள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, தாங்கள் விரும்பிய கல்லூரியில் சேருவார்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
வழிபாடு: வெள்ளியன்று கருமாரிக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, வணங்குங்கள்.
ரிஷபம்:
குடும்பத்தலைவிகள், உடன்பிறந்தவர்களால் பயனடைவார்கள். நாத்தனார் உறவு மேம்படும். வேலைக்குச் செல்லும் பெண்களிடம் சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரம் செய்யும் பெண்கள்... குறிப்பாக, புடவை வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். மாணவமணிகள் தேர்வு மதிப்பெண்களில் தங்கள் இலக்கை எட்டிவிடுவார்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வீர்கள்.
வழிபாடு: வெள்ளியன்று லக்ஷ்மி தாயாருக்கு முல்லைமலர் சூட்டி, வழிபடுங்கள்.
மிதுனம்:
மாமியார் தங்களுக்குப் பக்கத்துணையாக இருப்பார். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு ஒருசிலரின் ஜாதகம் கைக்கு வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுயதொழில் செய்யும் பெண்கள், பணத்தை கவனமாகக் கையாளவும். மாணவமணிகள் கல்வியில் சிறப்படைவர். தேக ஆரோக்கியம் மேம்படும்.
வழிபாடு: செவ்வாயன்று சப்தகன்னியருக்கு எலுமிச்சைமாலை அணிவியுங்கள்.
கடகம்:
உறவினர்களும் நண்பர்களும் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்குச் செல்லும் பெண்கள், விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள். சுயதொழில் செய்யும் பெண்கள், வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வார்கள். மாணவமணிகளுக்கு மேற்படிப்பில் விரும்பிய துறை கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.
வழிபாடு: வெள்ளியன்று ராகுகாலத்தில் பாம்புப் புற்றில் பாலூற்றி, வணங்குங்கள்.
சிம்மம்:
கணவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள், யாரிடமும் கொடுக்கல் - வாங்கல் வைத்துக்கொள்ள வேண்டாம். சுயதொழில் செய்யும் பெண்கள்... குறிப்பாக, சாம்பார்பொடி, ரசப்பொடி, ஊறுகாய் உள்ளிட்ட வீட்டுத் தயாரிப்பு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உடல் உஷ்ணம் குறையும்.
வழிபாடு: வியாழனன்று குருவுக்கு கொண்டைக்கடலை சுண்டல் படைக்கவும்.
கன்னி:
மாமியார், மாமனாரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. தம்பதியரிடம் சுமுகமான போக்கு நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்கள், உயரதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு... குறிப்பாக, அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்கள் மற்றும் புடவை வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். மாணவமணிகள், உயர்கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வர். உடல்நலம் சிறக்கும்.
வழிபாடு: சனியன்று லக்ஷ்மி நரசிம்மருக்கு துளசிமாலை சாற்றி, தரிசிக்கவும்.
துலாம்:
தம்பதியரிடையே இருந்துவந்த பிணக்குகள் தீர்ந்து, சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு... குறிப்பாக, எம்பிராய்டரி துணிவகைகள் நன்றாக விற்பனையாகும். உயர்கல்வி பயில நினைக்கும் மாணவமணிகள், தாங்கள் விரும்பியப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வழிபிறக்கும். தேகம் பளிச்சிடும்.
வழிபாடு: செவ்வாயன்று முருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி, வணங்கவும்.
விருச்சிகம்:
நாத்தனார் வீட்டாருக்கு உதவிபுரிவீர்கள். அண்டை வீட்டாரிடம் கொடுக்கல் -வாங்கலில் எச்சரிக்கை அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சுயதொழில் செய்யும் பெண்கள், வீட்டிலிருந்தபடியே வருவாயை அதிகரிப்பர். பங்குச் சந்தையில் சில மாற்றங்கள் செய்வார்கள். மாணவமணிகளின் நீண்டநாள் கனவு பலிக்கும். உடல் வலுவடையும்.
வழிபாடு: ஞாயிறன்று ராகுகாலத்தில் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்யவும்.
தனுசு:
குடும்பப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். கணவர்வழியில் உதவிகள் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள், எந்த முடிவாக இருந்தாலும், தாங்களே சுயமாகச் சிந்தித்து எடுத்து, செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்யும் பெண்கள், பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்கவேண்டாம். மாணவமணிகளின் நினைவாற்றல் திறன் மேம்படும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும்.
வழிபாடு: செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு ரோஜா மாலை சாற்றி, வழிபடவும்.
மகரம்:
குடும்பத் தலைவிகளுக்கு இருந்துவந்த பணப்பற்றாக்குறைப் பிரச்னை சரியாகும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யவேண்டாம். தேவையற்ற பேச்சைக் குறைக்கவும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் அதிகரிக்கும். மாணவமணிகள், கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். சளி, இருமல் மாதிரியான உபாதைகள் ஒருசிலருக்கு வந்துபோகும்.
வழிபாடு: செவ்வாயன்று அங்காளம்மனுக்கு முல்லை பூச்சரம் சாற்றி, கும்பிடவும்.
கும்பம்:
குடும்பத்தலைவிகள், தாங்கள் விரும்பிய பொருள்களை வாங்கிவிடுவர். தங்கள் பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை இனிதே நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். சுயதொழில் செய்யும் பெண்கள், சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். மாணவமணிகளுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு கை, கால்களில் லேசான வலி வந்து மறையும்.
வழிபாடு: சனிக்கிழமையன்று பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி, தரிசிக்கவும்.
மீனம்:
நாத்தனாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு மறைந்து, நட்பு பாராட்டுவார்கள். தங்கள் பிள்ளைகள் பெருமைத் தேடித் தருவர். வேலைக்குச் செல்லும் பெண்கள், மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். சுயதொழில் செய்யும் பெண்கள்... குறிப்பாக, மிளகாய்த்தூள், பருப்புப்பொடி தயாரிப்பது / மெஸ் நடத்தும் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவமணிகள், மேற்படிப்புக்கான தேர்வுகளுக்குத் தயாராவர்.
வழிபாடு: வெள்ளியன்று வராகிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, வணங்கவும்.