தமிழகத்தில் தற்போது பெய்து வரும் எதிர்பாராத கோடை மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், மின்சாரம் இல்லாததால் எரிவாயு தகன மேடைகள் செயல்படாமல், தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட உடல்கள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவானது.
மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை:
இந்த நிலையில், திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இது குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், "கோடை காலத்தில் எதிர்பாராத விதமாக மழை,சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. இதன் காரணமாகவே மின்தடை ஏற்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த சூழலை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். மாலைக்குள் முழுமையாக மின் விநியோகம் சீரமைக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
மேலும், ஜெனரேட்டர் பழுது மற்றும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் மின்தடை பிரச்சனை தீர்க்க தாமதம் ஆனதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர், "மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதனை சரி செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எதிர்பாராத கோடை மழை மற்றும் சூறைக்காற்று காரணமாகவே இந்த சிரமம் ஏற்பட்டது. மழைக்காலம் என்றால் முன்கூட்டியே திட்டமிட முடியும். ஆனால் இது எதிர்பாராத நிகழ்வு" என்று தெரிவித்தார்.
மாதந்தோறும் மின்கட்டணம் எப்போது?
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்றும், போதுமான மின்சாரம் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தேவைப்பட்டால் வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் மின்வெட்டு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை எல்லோருக்கும் தெரியும். நிதிநிலை பிரச்சனைகள் இருந்தாலும், பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். காலம் கணியும்போது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
மின்னகத்தில் ஆய்வு:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின் கசிவால் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், "பல இடங்களில் நம்முடைய மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். சில இடங்களில் பயனர்களுடைய அஜாக்கிரதை காரணமாகவும் விபத்துகள் நேரிடுகின்றன. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆழியார் மின் உற்பத்தி நிலையத்தின் திறன் குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நான் புதிதாகத்தான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். முதற்கட்ட ஆய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, உள்ள பிரச்சனைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
மின்தடை தொடர்பான தகவல்களை தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுவது மற்றும் மின்னகம் சரியாக பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அமைச்சர், "நான் மின்னகத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். மக்களுக்கு உடனடியாக அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தான் இந்த மின்னகம் தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.