மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த அப்டேட்!
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.