அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 3, 2025 - 13:04
Feb 3, 2025 - 13:32
 0
அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
ஜெயக்குமார்-மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக அமைதி பேரணி அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னை மெரினா சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. 

மேலும் படிக்க: அண்ணா நினைவு தினம்:  மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

இந்நிலையில், அண்ணா நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,  அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை. அண்ணாவின் பெயரை எந்த கட்டடத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறார். கட்டடங்களுக்கு தனது தந்தையின் பெயர் வைக்கிறார். அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை.

அண்ணாவின் பெயரைக் கூற திமுகவிற்கு அருகதை இல்லை. மாநில சுயாட்சியை தாரவார்த்து கொடுத்தது திமுக அரசு. மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் திமுக, அண்ணா.. அண்ணா.. எனக் கூறுகிறது.  அண்ணாவுக்காக திமுக எதையும் செய்யவில்லை. அறிவாலயத்தின் இன்வெஸ்டிகேஷன் ஆபிசரான ஆர்.எஸ்.பாரதி. அறிவாலயத்தின் ஏட்டையாவாக உள்ளார். ஈ.சி.ஆர். சம்பவத்தில் பெண்களின் அபாயக் குரல் ஆர்.எஸ்.பாரதிக்கு கேட்கவில்லை. 

மேலும் படிக்க: பெண்களை விடாமல் துரத்திய கார்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

ஈ.சி.ஆர் விவகாரத்தை திசைப்திருப்ப சந்துருவின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்‌. வேங்கை வயல் செல்வதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் போல இருக்கிறது. வேங்கைவயலில் யாரையும் உள்ளே செல்ல ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள்? திமுகவிற்கு கொத்தடிமை சாசனம் எழுதி கொண்டிருக்கும் திருமாவளவனுக்கு அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow