Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த கமல் வாரிசு... ரசிகர்களுக்கு ட்வீஸ்ட் வைத்த லோகேஷ்!
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : வேட்டையனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினிகாந்த் விசாகப்பட்டிணம் சென்றுள்ள நிலையில், இன்னொரு பக்கம் கூலியில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்து வருகிறது. அதன்படி, இந்தப் படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நகர்ஜுனா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அந்த வரிசையில் தற்போது ஸ்ருதி ஹாசனும் கூலி படத்தில் நடித்து வருவதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது.
முன்னதாக கூலி படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதில், முதல் நாள் கூலி படப்பிடிப்பில் என கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலானதும், அதனை உடனடியாக டெலிட் செய்துவிட்டார் ஸ்ருதி. அப்போதே கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் செளபின் சாஹிர், நேற்று நாகர்ஜுனா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகின. அதோடு அவர்களது கேரக்டர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, செளபின் சாஹிர் தயாள் என்ற கேரக்டரிலும், நாகர்ஜுனா சைமன் என்ற பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அமீர்கான், உபேந்திரா அல்லது சத்யராஜ் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ருதிஹாசன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ள படக்குழு, அவரது கேரக்டர் பெயர் ப்ரீத்தி எனவும் அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டரில் கையில் சம்மட்டியுடன் டெரராக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். முன்னதாக ரஜினி, செளபின் சாஹிர், நாகர்ஜுனா போஸ்டர்களில் கோல்ட் வாட்ச் ஒரு குறியீடாக இருந்தது. ஆனால், ஸ்ருதிஹாசன் போஸ்டரில் வாட்ச் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ட்வீஸ்ட்டாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க - ஜமா ஓடிடி திரைப்பார்வை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கமலுக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. அதன்பின்னர் தான் ரஜினி தரப்பில் இருந்து லோகேஷுக்கு அழைப்புச் சென்றது. அதேநேரம் தொடர்ந்து கமல்ஹாசனுடன் பயணித்து வரும் லோகேஷ், அவரது மகள் ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ என்ற ஆல்பத்திலும் நடித்திருந்தார். இந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜ்ஜும் ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் மாஸ் காட்டியிருந்தனர்.
இனிமேல் ஆல்பத்தை தொடர்ந்து தற்போது கூலி படத்திலும் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது. அதேபோல், ரஜினியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்தில் ரஜினியின் மகள் கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. செளபின் சாஹிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் வரிசையில் கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகவுள்ளன. அதில் எதிர்பாராத சர்ப்ரைஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
What's Your Reaction?