அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு...வாழ்த்து சொன்ன விஜய்
உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வு 5ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (28ம் தேதி) தொடங்குகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு
இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இதில் 4 லட்சத்து 46 ஆயிரம் 411 மாணவர்களும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகின்றனர். 4,113 தேர்வு மையங்களில் 12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உள்ளனர்.
Read more: அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!
தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் வாழ்த்து
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என தெரிவித்துள்ளார்.
Read more: பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS
What's Your Reaction?






