பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை, தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்று பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டார் சந்தோஷ். அப்போது எதிர்ப்பாராதவிதமாக நாகப் பாம்பு சந்தோஷினை கடித்தது. பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்தார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து, அதனை வனப்பகுதியில் விடுவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பு பிடி வீரரை, பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது இறப்புக்கு இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






