காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி
சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிருப்தி அடைந்தார்.
சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிருப்தி அடைந்தார்.
Mechanic Drinking Old Bike Oil : வாகன இன்ஜின்களில் இருந்து வெளியேற்றப்படும் பழைய ஆயிலை குடித்து மெக்கானிக் உயிர் வாழ்வதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Heavy Rain Alert in Tamil Nadu : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
முடா வழக்கு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விடிய விடிய விழித்து குழந்தைகள் உருவாக்கிய பூக்கோலத்தை கால்களில் மிதித்து பெண் ஒருவர் கலைத்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடைகோரிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Muda Corruption Case : ''நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
MUDA Land Curruption Case on Siddaramaiah : முடா முறைகேட்டில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்த நிலையில் நாளை அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்
Cuddalore Mayor Visit Govt School : கடலூரில் பள்ளியை ஆய்வு செய்ய மேயர் சென்ற நிலையில் சுத்தம் செய்யாமல் இருந்த வகுப்பறையை சுத்தம் செய்தார். மேலும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.