K U M U D A M   N E W S

ramadoss

நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

’பாமக சாதிக்கட்சி என்றால், விசிக என்ன கட்சி?’.. திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி!

''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்' ! - கருணாஸ்

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

#JUSTIN : முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ் | Kumudam News 24x7

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ்

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாயுக்கசிவால் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்?.. சந்தேகம் எழுப்பும் அன்புமணி!

''கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

'இதை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள்'.. மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்!

''மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தலித் சமூகத்தினர் முதல்வராக முடியாதா? - திருமாவளவனின் கருத்தால் எழுந்த சூடான விவாதம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.

PMK Anbumani Ramadoss : கொல்கத்தா கொடூரம்... மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

PMK Anbumani Ramadoss Condemns Kolkata Doctor Murder Case : கொல்கத்தாவில் அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை: மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Anbumani Ramadoss : பட்டியலின சமுதாயத்தை சார்ந்தவரை முதல்வராக ஆக்குவோம் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss About Scheduled Caste Chief Minister : தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Minister Sivasankar : நான் தான் அமைச்சர்; அன்புமணி ராமதாஸுக்கு எப்படி தெரியும்? : சிவசங்கர் கேள்வி

Transport Minister Sivasankar on Anbumani Ramadoss : போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன்; ஆனால் பேருந்து கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Bar License : பார் உரிமம் வழங்குவதற்கு இவ்வளவு வேகமா?.. 48 மணி நேரத்தில் நடந்த மர்மம் என்ன?.. ராமதாஸ் சரமாரி கேள்வி

PMK Leader Ramadoss on Chennai Bar License : சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Anbumani Ramadoss : மது வணிகம் “தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி”; அன்புமணி ராமதாஸ் சாடல்

Anbumani Ramadoss Slams Tamil Nadu Govt : “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Anbumani Ramadoss : வட்டி கட்டியே வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள்.. 1,500 திரைப்படங்கள்.. ரூ.4,000 கோடி.. அன்புமணி வேதனை

Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ராஸ்ட்ராங் மனைவி - ரஞ்சித், அன்புமணி வாழ்த்து

Porkodi Armstrong : ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

ஏலத்தில் விடப்படும் எம்.பி.பி.எஸ் இடங்கள்.. ஆள்மாறாட்டம் முறைகேடுகள்... அன்புமணி ராமதாஸ் காட்டம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட  முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?