பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ் கருத்து
கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 80 கோடி மக்கள் வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளனர், அதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.
‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..' பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ரா ரா ரா ராமையா..’ பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருபார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார்.
மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி
Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி
''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.
"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்