K U M U D A M   N E W S
Promotional Banner

‘திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து’- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.

அவர்களது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை- அமைச்சர் சேகர்பாபு

“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மம்…திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

இவரே வெடிகுண்டு வைப்பாராம். இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சனம்

பாஜகவின் கருத்துக்களை இபிஎஸ் பேச இதுதான் காரணம்...சீமான் விளக்கம்

2026க்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கருத்துக்களை பேசி வருகிறார் என சீமான் கருத்து

இபிஎஸ் கேவலமான அரசியலை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சசிகலாவின் பாதுகாப்புக்காக இருந்த வாட்ச்மேன் தான் எடப்பாடி: ராஜீவ்காந்தி தாக்கு

”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

இபிஎஸ் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஆட்சி ‘Simply waste’ – இபிஎஸ் சாடல்

அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு

கோவை ராசியான மாவட்டம்.. இபிஎஸ் கோட்டைக்குச் செல்வார்- எஸ்.பி.வேலுமணி

“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: உரிய இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும்.. இபிஎஸ் உறுதி

விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் வனபத்திரகாளியம்மன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்...

சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் வனபத்திரகாளியம்மன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்...

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்- ஜி.கே.வாசன்

“எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.. எஸ்.பி.வேலுமணி

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்…நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் எஸ்.பி. மிரட்டல்- இபிஎஸ் கண்டனம்

மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திமுக நிறைவேற்றும் ஒரே வாக்குறுதி இதுதான்.. இபிஎஸ் விமர்சனம்

“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.