#BREAKING || அக்.1-ல் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
NTK Chief Seeman About Alliance with TVK Vijay : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என என்னிடமே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு முடிந்தபின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார்.
Swiggy Delivery Boy Death : சென்னை கொரட்டூரில் உணவு டெலிவரி செய்து வந்த கல்லூரி மாணவர் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பாணியில் விஜய் செயல்படுவதாக ஒப்பீடு.
மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.
ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு
ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.
Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு
''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 17-09-2024
வாழை திரைப்படத்தின் வெற்றி விழாவில் அம்மாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்
தமிழ்நாட்டில் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள். பத்திரமாக மீட்கப்பட்ட 30 தமிழர்கள்
நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.