K U M U D A M   N E W S

Mushfiqur Rahman : இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹ்மான்.. பாக். பந்துவீச்சை பிளந்த வங்கதேசம்..

Bangladesh Cricketer Mushfiqur Rahman : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது.

''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

மதத்திலிருந்து விலகி இருங்கள் - திமுக அரசை நேரடியாகக் குற்றம் சாட்டிய கே.பாலகிருஷ்ணன்

மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துரைமுருகனை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!

''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

Director Nelson : ”ஆம்ஸ்ட்ராங் கொலை..என்கிட்ட விசாரணை நடக்கல..இதெல்லாம் பொய்..” இயக்குநர் நெல்சன் மறுப்பு

Director Nelson in Armstrong Murder Case : கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளர்.

Katchatheevu Issue : மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivaraman Death : சிவராமன் உயிரிழப்பு - காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.

Chennai Central : பயணிகளுக்கு தொந்தரவு - கூண்டோடு சிக்கிய மாணவர்கள்

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் ஏறியும், கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு அளித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் கூண்டோடு சிக்கினர்.

Kamala Harris : ”என் தாய் தைரியமானவர்... என் தந்தை ....” சிகாகோ மாநாட்டில் கமலா ஹாரிஸ் எமோஷனல்!

Kamala Harris Tribute To Her Indian Mother in Chicago Conference : அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி சார்பில் சிகாகோவில் நடந்த தேசிய மாநாட்டில் அக்கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது தாயை நினைவுகூர்ந்து உரையாற்றியது கவனத்தை பெற்று வருகிறது. 

Annamalai : முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற சிவராமன் கொலையா?.. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்

Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Sivaraman Death : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. முக்கிய குற்றவாளி மரணம்..

NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.

PM Modi Visit Ukraine : இன்று உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.. ரயிலில் 10 மணி நேரம் பயணம்!

PM Modi Visit Ukraine Today : உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ஆனாலும் 'போர் எதற்கும் தீர்வு அல்ல; போரை நிறுத்த வேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Tamilisai Soundararajan : தம்பி விஜய் அப்படி இருக்கக் கூடாது... தவெக-வுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

BJP Tamilisai Soundararajan Advice To TVK Vijay : சில கட்சிகள் ஆரம்பிக்கும் போது ஒன்றாகவும், பயணிக்கும் போது வேறு ஒன்றாகவும் இருக்கிறது. அப்படியெல்லாம் தம்பி விஜய் அவர்கள் இருக்கக் கூடாது என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

சீனியர்ஸ் Rocked.. எடப்பாடி Shocked... சுக்கு நூறாக நொறுங்கிய EPS கனவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

சவுதிக்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணன்.. இன்டர்போல் உதவியை நாடும் தமிழக போலீஸார்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

HBD Chennai: வங்கக்கடலுக்கு எதிரே நிற்கும் கம்பீரம்.. வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநிலக் கல்லூரியின் கதை

இளைஞர்களின் கனவை சுமந்து கடலுக்கு எதிரே கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு கட்டுரை

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்?.. பாஜகவுடன் கூட்டணியா? - ஹெச்.ராஜா ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

VidaaMuyarchi: “இதுதான் அப்டேட்டா... விடாமுயற்சி ரிலீஸ் தேதி சொல்லுங்க..” கதறும் அஜித் ஃபேன்ஸ்!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. ஆனால், அதனை ட்ரோல் செய்து வரும் அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி ரிலீஸ் தேதி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

HBD CHENNAI: சென்னையின் கதையை சொல்லும் ‘ஐஸ் ஹவுஸ்’

சென்னையின் வரலாறு என்று எடுத்துக் கொண்டாலே சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ் போன்ற குறிப்பிட்ட சில கட்டடங்களின் கதைகளை மட்டுமே சென்னவாசிகள் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் இன்றளவும் சென்னையின் கதையை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சுவாரஸ்மிக்க கதையை சுமந்துக் கொண்டு வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது ”ஐஸ் ஹவுஸ்”. 

HBD CHENNAI: இந்தியாவின் முதல் கோட்டையான சென்னையின் ‘புனித ஜார்ஜ் கோட்டை’ பற்றி தெரியுமா?

இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன… குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன… ஆனால் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக கம்பீரமாக நிற்கிறது ‘சென்னை’… இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக கட்டப்பட்ட கோட்டை உள்ளது… கிட்டத்தட்ட 385 ஆண்டுக்கால நினைவுகளை சுமந்துக் கொண்டு, வங்கக் கடலை வெறித்தப்படி, மிடுக்காகவும், தமிழ்நாட்டின் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது அந்த கோட்டை… அதுதான் கறுப்பர் நகரமான சென்னையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ”புனித ஜார்ஜ் கோட்டை”…

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.