Manu Bhaker: மக்களின் அன்பு மழையில் நனைந்த மனு பாக்கர்.. சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு!
மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.