திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு