K U M U D A M   N E W S

#BREAKING: ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.. என்ன காரணம்?

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

#BREAKING: கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு

ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்

#BREAKING: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடக்கும்

அக். 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது

#BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

மயிலாப்பூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... அரசு மீது குற்றம் சாட்டும் மக்கள்

சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு... திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்..

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரம்.. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிப்பு

ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்.. பழுதான வாகனங்கள்

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

"நெனச்சா பயமா இருக்கு.. கஷ்டப்படுவதே தலையெழுத்து" - ஆட்டோ ஓட்டுநர் வேதனை

சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.