K U M U D A M   N E W S

தவெக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு: விஜய் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.