Ambattur Fire Accident | மளமளவென பரவிய தீ.. புகை மண்டலமாக மாறிய அம்பத்தூர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
தெலங்கானா கரீம்நகர் மாவட்டம் மனகொண்டூரு கிராமத்தில் விபத்தில் லாரி டயரில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு.
சாலையோரம் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் எழுந்த புகை காரணமாக பேருந்து மீது பைக் மோதியதாக தகவல்.
குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.
ராணிப்பேட்டை அருகே விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம் அருகே விபத்தால் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் உயிரிழந்ததால், அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த விபத்தில் ஒரு பலியான நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து.
கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
சீட் பெல்ட் அணியாமல் காரில் வேகமாக சென்ற வில்லன் நடிகரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.