K U M U D A M   N E W S

LIC

திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! காவல் நிலையத்தில் புகார்!

நெல்லையில் திருமணமான மறுநாளே வீட்டில் சிசு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுமாப்பிள்ளை அளித்த புகாரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'ஈரான் மீதான போரை யாராலும் தடுக்க முடியாது!' - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள், அமெரிக்காவின் மாறுபட்ட நிலைப்பாடு என மத்திய கிழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடிந்ததும் கதவைத் தட்டிய போலீசார்...மாஜி அமைச்சருக்கு காத்திருந்த ஷாக்...திமுகவில் தொடரும் அதிரடி!

குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

'என் மகள் மது பழக்கத்திற்கு அடிமையா?' - மகளுக்காக அதிரடி காட்டிய ACTION KING !

இளைய மகள் திருமணத்தைத் தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் அவதூறு கருத்துகளுக்கு நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை மற்றும் அதுதொடர்பான புகார் நடவடிக்கையும் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது!

காவல்நிலைய மரணம்: CCTV காட்சிகளை கசியவிட்டது யார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைச் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை நகைக்கடை கொள்ளை: சினிமா பாணியில் சேசிங்.. கமிஷனர் சொன்ன பகீர் தகவல்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் இன்ஸ்டா காதலிக்காகப் பல கோடி ரூபாய் நகைகளைக் கொள்ளையடித்த இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட பின்னணியை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு: அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"தொடர் கதையாகும் காவல் நிலைய மரணங்கள்.." தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி.!

தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனு கொடுக்க வந்தவருக்கு அடி, உதை..ரவிசங்கர் விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற துறையூர் பகுதி கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை நகைக்கடை கொள்ளையில் அதிரடி திருப்பம்! நிஷாந்த் மற்றும் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செல்போன் சிக்னல் மூலம் கிடைத்த துப்பும் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.