K U M U D A M   N E W S
Promotional Banner

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று: பணிகளை மேற்கொள்ள அனுமதி!

தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்.. பெண் உட்பட 2 பேர் கைது!

ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய கொக்கையின், கஞ்சா பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஜாம்பியா நாட்டைச்சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.