K U M U D A M   N E W S

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.