K U M U D A M   N E W S
Kumudam Ad

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருச்சி குஜ்ஜரின் 'மோடி' முத்து மாலை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்

2025 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற மே 24, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உருவம் பொறித்த முத்து மாலையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தோன்றிய ருச்சி குஜ்ஜர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு

ரவி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாரா? உண்மையினை உடைத்த ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அது காதல் இல்லை.. வெறும் வதந்தி – சமந்தாவின் மேலாளர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானுக்கு முப்படைகளும் தக்க பாடத்தை புகட்டியுள்ளது - மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.