K U M U D A M   N E W S
Kumudam Ad

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

OTT Platforms Censor : ஓடிடி யிலும் தணிக்கை... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

"மதுக்கடைகள் மூடல்.." அமைச்சர் முத்துசாமிதடலாடி பதில் !

நாடு முழுவதும் மதுக்கடை மூடல் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்கும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

LIVE : Thirumavalavan Speech : தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் - திருமா

VCK Leader Thirumavalavan About Liquor Ban in Tamil Nadu : விசிக தலைவர் திருமாவளவன் x பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. மத்திய அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

4 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு

பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகளும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

100 Days of PM Modi 3.0 : 100 நாட்களில் பிரதமர் மோடி செய்தது என்ன?.. ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட அமித்ஷா!

100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.