K U M U D A M   N E W S

சென்னை

தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை.. நா.த.க மனுவிற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீரன் பட பாணியில் ஸ்கெட்ச்... விமானத்தில் வந்து கொள்ளை... யார் இந்த இராணி கொள்ளையர்கள்?

ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 20 லட்சம் வரை கொள்ளையடிக்க வேண்டும் என, மாஸ்டர் பிளான் போட்டு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இரானி கொள்ளையர்கள் குறித்து, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

Dhoni என்னும் ஐந்தெழுத்து மந்திரம்.. பார்த்திபன் நெகிழ்ச்சி

மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன்முதலில் சந்தித்தேன் என்று தோனியுடன் சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்.. தண்ணீர் பற்றாக்குறைக்கு Bye!

சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.

திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து எப்போது? நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 நகைப்பறிப்பு சம்பவம்.. என்கவுண்டர் செய்தது எதற்காக? காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னையில் நேற்று ( மார்.25 ) தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட  கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து கொண்டு தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 

முதல் முறையாக விமான பயணம்.. உற்சாகத்தில் மாணவர்கள்!

கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 

ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை நகைப்பறிப்பு சம்பவம்.. முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை

அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை