K U M U D A M   N E W S

சென்னை

வாங்க முடியாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனையாகிறது.

Diwali 2024: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்... ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Diwali 2024 | Kumudam News

கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Diwali 2024 | Kumudam News

அமரன் படம் தொடர்பான வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்... பேரதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால அவகாசம் கேட்ட IG-க்கள்.. கடுப்பான நீதிபதிகள்

32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, காவல்துறை கால அவகாசம் கோரியது. இதை ஏற்க மறுத்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி பயன்படுத்தப்பட்ட விவகாரம்.. சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூரில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் ரீல்ஸ் வீடியோ விவகாரம்.. கேள்விகளால் துளைத்த நீதிபதி |

திருவேற்காடு கோயிலில் முன்னாள் பெண் தர்மகர்த்தா ரீல்ஸ் வீடியோ எடுத்த வழக்கில் முன்னாள் தர்மகர்த்தா வளர்மதியின்  மன்னிப்பை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Diwali Flight Tickets: என்ன கொடுமை சாரே இது..? விமான டிக்கெட் கட்டணம் உயர்வு... தீபாவளி அட்ராசிட்டி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தேவநாதனுக்கு ஜாமின் - "முடியாது" சொன்ன ஐகோர்ட் - கசிந்த மிக முக்கிய தகவல்

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.