K U M U D A M   N E W S
Kumudam Ad

வேங்கை வயல் விவகாரம் – காவலர் தலைமறைவு

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா தலைமறைவாக உள்ள விவகாரம்

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்... மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் போலீசாரின் விசாரணைக்கு பின்ன்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

மீண்டும் போராட்டத்தில் குதித்த விசிகவினர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை கைது செய்த போலீசார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் கருத்து கேட்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.