K U M U D A M   N E W S

காவல்துறை

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

கோவையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்யவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள்.. விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார்!

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு.. ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்க மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதாக தெரிவித்து, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறைக்கு எதிரான முன்னாள் அமைச்சரின் வழக்கு.. மனித உரிமை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையில் வாள்களுடன் திரிந்த நபர்கள் கைது.. அச்சத்தில் பொதுமக்கள்!

மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகரில் வாள்களுடன் சுற்றிதிரியும் குற்றப்பிண்ணனி உடையவர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

TN Police Investigation | திமுக ஆதரவாளர் வெட்டிப் படுகொலை... என்ன ஆனது..? முழு விவரம்

மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், போலீசார் குவிப்பு; ஆம்புலன்ஸை ஆதரவாளர்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு

குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!

குறைந்த விலையில் தங்க கட்டி கொடுப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ₹48 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கருப்பையா ( 23 ), கண்ணன் ( 22 ) ஆகிய இருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.