K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

சாதி சான்றிதழ் தொடர்பாக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு ஏன் பாரபட்சம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு

விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக உட்கட்சி விவகாரம்.. விசாரணையை தொடரும் தேர்தல் ஆணையம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. டிஜிபி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கு.. திரும்ப பெற்ற எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.