மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

Oct 16, 2024 - 14:49
 0
மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய அப்டேட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது.

சென்னையில் அக்டோபர் 18-20ம் தேதிகளில் ​​சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

மேலும் படிக்க: கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow