”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Sep 30, 2024 - 15:09
Sep 30, 2024 - 15:32
 0
”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர்  வரையிலான காலகட்டத்தை தென்மேற்கு பருவமழை காலமாக கணக்கிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சராசரி இயல்பாக 328.4 மி.மீ என்ற அளவில் பெய்ய வேண்டும் ஆனால் இந்த ஆண்டு 389.1 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 18% கூடுதலாகும்.

இன்றுடன் செப்டம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான மழை கணக்கிடும் பணி நிறைவடைந்தது. நாளை முதல் வடகிழக்கு பருவமழை கணக்கீடு தொடங்குகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பு குறித்து நீண்டகால வானிலை முன்னறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 1ம் தேதி,  தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி, தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் அக்டோபர் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow