108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்
கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்றனர்.

தை மாதத்தில் பெளர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக் கூடிய நாளில் முருகனுக்கு மிகவும் விசேஷமான தைப்பூச வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (பிப்.11) தைப்பூச திருவிழா நடைபெறவுள்ளது. தைப்பூசமானது பூச நட்சத்திரமான இன்று (பிப். 10) மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி நாளை (பிப். 11) மாலை 6 மணிக்கு மேல் முடிவடைகிறது. இந்த நேரத்திற்குள் பக்தர்கள் தைப்பூச வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் 48 நாட்கள் தொடர் விரதம் இருந்து காவடிகளை சுமந்து முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள். அங்கு முருகனை பக்தியுடன் தரிசித்துவிட்டு விரதத்தை முடிக் கொள்வார்கள். தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் முருகன் கோயில்களில் திருவிளக்கு பூஜை போன்ற வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
மேலும் படிக்க: 400 வருட பாரம்பரிய சர்க்கரை காவடி.. முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. துடியலூர் அருகே ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இகோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சன்னதியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து வடமதுரையைச் சேர்ந்த கலைக் குழுவினரின் வள்ளி - கும்மி நடனம் நடைபெற்றது. இதனை சுற்று வட்டார பகுதியிகளில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.
தைப்பூச திருநாள் இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளிலேயே மலேசியாவில் மட்டும் தான் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகன் , நரகாசுரனை வதம் செய்யும் சிறப்பு நிகழ்வு பழனியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
What's Your Reaction?






