பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
Savukku Shankar Released From Jail : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்
CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
''திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Race Club Case Update: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.
National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.