Senthil Balaji : “சாட்சிகளை தொடர்புகொள்ளக் கூடாது..” செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனைகள் என்னென்ன?
Senthil Balaji Bail Condition Details in Tamil : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கைதான செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Senthil Balaji Bail Condition Details in Tamil : கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடந்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜாமின் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்தன.
செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்தன. இதனையடுத்து உச்சநீதிமன்றம் சென்ற செந்தில் பாலாஜிக்கு, தற்போது நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது. இதில் 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி ஜாமீன் நிபந்தனைகள் :
செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
அரசு தரப்பு சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளக்கூடாது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி(Senthil Balaji) இப்போது வரை விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
மேல் முறையீடு செய்தவர் ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, ஜாமீனில் வெளியாவதற்கு முன் தனது பாஸ்போர்ட்டை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
What's Your Reaction?