பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!

கதாநாயகர்கள் படத்தில் கொடுக்கக்கூடிய டயலாக்கை எப்படி பேசுவார்களோ அதே போல் பவன் கல்யாண் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசி வருகிறார் என முன்னாள் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.

Sep 27, 2024 - 20:26
 0
பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!
பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற, தனித்துவ சுவை கொண்ட திருப்பதி கோயில் லட்டை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது.

இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது.

இந்நிலையில் முன்னாள் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா மதுரை உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மார்ச் மாதத்திலேயே ஜெகன்மோகன் ரெட்டியின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடு முதல்வராக ஜூலை மாதத்தில் தேர்வு செய்யப்பட்டு அவரது ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட நெய் குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளனர். அப்போது பயன்படுத்தப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை 100 நாட்களில் நிறைவேற்ற முடியாததால் மக்களை திசை திருப்பவே திருப்பதி தேவஸ்தான விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு கடவுள் வழிபாடுகள் நடத்தும் அரசு விழாக்களில் காலணி அணிந்தவாறு நிப்பார்” என புகைப்படத்துடன் ஆதாரத்துடன் செய்தியாளர்களுக்கு காட்டினார்.

மேலும் படிக்க: திமுகவிற்கு இன்னும் 15 அமாவாசை தான்... முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம்....

தொடர்ந்து பேசிய அவர், “லட்டு பிரசாதத்தில் எதுவும் கலக்கவில்லை என்கின்ற ஆய்வு அறிக்கை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் மனதை புண்படுத்தும் வண்ணம் அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனர். படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் இந்த படத்தில் கொடுக்கக்கூடிய டயலாக்கை எப்படி பேசுவார்களோ அதே போல் பவன் கல்யாண் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசி வருகிறார்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow