NTK Seeman Press Conference : "தம்பி விஜய்க்கு நான் இருக்கேன்...  எனக்கு யாரு இருக்க?" - சீமான் ஆதங்கம்!

NTK Seeman Press Conference About TVK Vijay : புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்க்காக தான் இருப்பதாகவும், தனக்காக யார் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aug 24, 2024 - 22:37
Aug 24, 2024 - 23:05
 0
NTK Seeman Press Conference : "தம்பி விஜய்க்கு நான் இருக்கேன்...  எனக்கு யாரு இருக்க?" - சீமான் ஆதங்கம்!
NTK Seeman Press Conference About TVK Vijay

NTK Seeman Press Conference About TVK Vijay : திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா என்பது குறித்து சீமான் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது, விஜய் மாநாடு நடத்தி கட்சி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கும்போது கூட்டணி குறித்து அவரே சொல்வார் என்று கூறியதோடு, தன்னை விமர்சனம் செய்தவர்கள் தற்போது விஜயை விமர்சனம் செய்கின்றனர். விஜய்க்காக தான் இருப்பதாகவும், ஆனால் தனக்கு யாருமில்லை என்றும், இதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்னை என்றும் சீமான் தெரிவித்தார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ஆரம்பித்து, அதன் கொடி மற்றும் கட்சி பாடலை ஆக்ஸ்ட் 22 ஆம் தேதி வெளியிட்டார். விஜய் கட்சித் தொடங்கிய நாளில் இருந்தே அவர் யாருடன் கூட்டணி வைக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனைத்து கட்சிகளும் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும் தம்பி.. தம்பி என்று ஆரத்தழுவி வரவேற்றார். எனவே, சீமானுடன் விஜய் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், விஜய் இன்றளவும் கூட்டணி குறித்து எதுவும் சொல்லவும் இல்லை, அவரது கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. ஆதலால், தவெகவின் கூட்டணி முடிவு குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், சீமானின் பேச்சு என்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow