உலகம்

"நோ சொல்ல மனசில்லை": 21 மனைவிகளுடன் வசிக்கும் பிச்சைக்காரரின் விசித்திரக் கதை!

வங்கதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் மொரு மியா 21 மனைவிகளுடன் ஒரே அறையில் வசித்து வருகிறார்.


Bangladeshi beggar

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு கல்யாணம் நடப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு 21 பெண்கள் தாங்களாகவே முன்வந்து மனைவியாக மாறியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"பெண்களே வந்தாங்க... வேண்டாம்னு சொல்ல மனசில்லை!"

வங்கதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மொரு மியா பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். தனக்கு 21 மனைவிகள் இருப்பதாகக் கூறி நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளார்.

"என்னிடம் அவர்களுக்கு என்ன பிடிச்சதுனே தெரியல; அவங்களே தேடி வந்து 'கல்யாணம் பண்ணிக்கலாமா'னு கேட்டாங்க. வேண்டாம்னு சொன்னா இன்சல்ட் ஆயிடுமேனு ஓகே சொல்லிட்டேன்" என்று ஜாலியாகப் பேசுகிறார் மொரு மியா. இவரிடம் விருப்பம் தெரிவித்து வந்தவர்களில் பெரும்பாலானோர் இவரை விட வயதில் மூத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே ரூம்... மனைவிகளுக்கு ஷிஃப்ட் சிஸ்டம்!

21 மனைவிகள் என்றதும் பெரிய பங்களா, சொகுசு வாழ்க்கை என்று நினைத்துவிட வேண்டாம். ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் தான் இவர்களின் வாழ்க்கை நகர்கிறது.

அதுமட்டுமில்லாமல், தினமும் பிச்சை எடுக்கச் செல்லும்போது மனைவிகளுக்குள் எந்தச் சண்டையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 'ஷிஃப்ட் முறை' வைத்துள்ளார். தினமும் ஒரு மனைவி அவருடன் பிச்சை எடுக்கச் செல்ல, அடுத்த நாள் அடுத்த மனைவி என ரொட்டேஷன் முறையில் அழைத்துச் செல்கிறார்.

பெயர்களை மறந்த 'மன்மதன்'!

செய்தியாளர்கள் மொரு மியாவைச் சந்தித்து 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது தான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. மனப்பாடம் செய்து வைத்தது போல் 8 பெயர்களை (ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பருல்) மட்டுமே கூறிய அவர், பாக்கி மனைவிகளின் பெயர்களைச் சொல்ல முடியாமல் தடுமாறினார். "இத்தனை மனைவிகள் இருக்கும்போது எல்லாரோட பெயரையும் ஞாபகம் வச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் சார்" எனக் மொரு மியா ஒப்புக்கொண்டார்.

நெட்டிசன்களின் 'ஆராய்ச்சி'

மொரு மியாவின் பேட்டி வீடியோக்கள் பரவியதும் நெட்டிசன்கள் தங்களின் பாணியில் கமெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். "பெண்களைக் கவரும் இவரின் தனித்திறமையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்" என சிலர் ஜாலியாகக் கூற, சமூக ஆர்வலர்களோ, "சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு இவர் ஒரு வாழ்க்கை முகவரியைக் கொடுத்திருக்கலாம்" என வேறு கோணத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், 21 மனைவிகள், ஒரே அறை வீடு, ஷிஃப்ட் முறையில் பிச்சை எடுக்கும் வாழ்க்கை என மொரு மியாவின் இந்த வித்தியாசமான வாழ்க்கை நெட்டிசன்களுக்குச் செம என்டர்டெயின்மென்ட்டாக மாறியுள்ளது.