தவெக அரசியல் பயிலரங்கம் – யாருக்கு அங்கீகாரம்? | Kumudam News 24x7
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான கட்டுமானங்களை கடல் அலை இழுத்துச் சென்றது.
சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் திபலாங் பகுதியில் அகர்தலா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.
சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை
நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 19,000 கனஅடியாக அதிகரிப்பு
திருச்சி: நிலமோசடி தொடர்பாக போலீசார் சோதனை. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக புகார்
மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு