தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நீடித்து வருகிறது.
இதற்கிடையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலர்களுடன் முதல்வர் விஜய் தொடர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு துறையின் நிதித் தேவைகள், புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே, இறுதி பட்ஜெட் வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படலாம் என அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசின் முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிகரித்துள்ளது.

LIVE 24 X 7