தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.
சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது.
ஆனால், 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.
அதன்பின், மீண்டும் 5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது.
அதேபோல்,6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று ஏதோ கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ₹300 உயர்ந்து ₹14,250-க்கும், ஒரு சவரனுக்கு ₹2,400 உயர்ந்து ₹1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலைமாறாமல் இருந்துவந்த வெள்ளி விலையும் தன் பங்கிற்கு, ஒரு கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகை வாங்க காத்திருந்த இல்லத்தரசிகளுக்கு இன்று விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7