சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில்,ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் அமையும் பட்சத்தில், பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமில் குப்பம், நொச்சி நகர் உள்ளிட்ட 12 மீனவக் கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. படகுகள் நிறுத்துமிடம், வலைப் பராமரிப்புப் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இருப்பிடமும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆமைகள் முட்டையிடும் கடலோரப் பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், அரசு இத்திட்டத்தை அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்திட்டம் கடலோரச் சூழலியல் மற்றும் காலநிலைப் பாதிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக, அதிமுக, பாஜக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், "மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல் மற்றும் நிர்வாக நிறுவனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முன்மொழிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவது குறித்தும் விவாதிக்க பட்டினப்பாக்கத்தில் வரும் 15-ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த மீனவ அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

LIVE 24 X 7