தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் குமார் பேசினார். அப்போது, மாநிலத்தின் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு இந்த ஒரு துறை மட்டுமே போதுமானது என்றும், அரசின் 54 துறைகளிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துத் துறைத் தகவல்களையும் ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், தனது வேளச்சேரி தொகுதி மக்களுக்காகத் தனிச் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இனி குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், மக்கள் தாய்மொழியிலேயே குரல் பதிவாக (Voice note) புகார்களைப் பதிவு செய்ய முடியும் என்றும், ஆங்கில அறிவு இல்லாமல் எளிதாகப் புகார்களைப் பதிவிடலாம் என்றும் அவர் விளக்கினார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்குத் தானாகவே சென்றுவிடும் இந்த வசதி, விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
மேலும், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இவற்றுடன், 'தமிழ்நாடு ஏஐ விஷன்' (Tamil Nadu AI Vision) என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'சி.எம். 2.0 டேஷ்போர்டு' (CM 2.0 Dashboard) மேம்படுத்தப்படும் என்றும் அவர் பேரவையில் தெரிவித்தார்.

LIVE 24 X 7