அரசியல்

டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது... பரந்தாமனுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ஆதவ்..!

இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது. 

டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது... பரந்தாமனுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ஆதவ்..!
by election
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியைத் தவிர மற்ற 3 கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளனர்.

இடைத்தேர்தல் என்றாலும் 4 முக்கிய கட்சிகள் நேரடியாக களம் காண்பதால் இரு தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து, வெற்றியைப் பெற அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

அந்த வகையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க த.வெ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் பிறப்பித்துள்ளார்.

திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக தவெக ஆதவ் அர்ஜூனாவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருப்பது  இடைத் தேர்தல் சூடிப்பிடிக்க செய்துள்ளது. 

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:

அமைச்சர் என்.ஆனந்த்
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் நிர்மல் குமார்

மதுராந்தகம் (தனி) சட்டசபை தொகுதி தேர்தல் பணிக்குழு:

பொறுப்பாளர்:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இணைப் பொறுப்பாளர்கள்:

அமைச்சர் ராஜ்குமார்
அமைச்சர் தென்னரசு
அமைச்சர் வினோத்

துணைப் பொறுப்பாளர்கள்:

எம்.எல்.ஏ. சரவணமூர்த்தி
எம்.எல்.ஏ. தியாகராஜன்
எம்.எல்.ஏ. விஜயராஜ்
எம்.எல்.ஏ. காமாட்சி
எம்.எல்.ஏ. பாலாஜி (எ) மணிகண்டன்

101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி: பொறுப்பாளர்:

அமைச்சர் அருண்ராஜ்

இணைப் பொறுப்பாளர்கள்:

1. அமைச்சர் விஜய் பாலாஜி
2. அமைச்சர் விஜயலட்சுமி
3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

துணைப் பொறுப்பாளர்கள்:

1. பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
2. சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி
4. திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
5. சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி