ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் செங்கோட்டையனை இலக்காக வைத்து எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தைத் தொடங்கினார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும், தலைக்கனம் காரணமாகவுமே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா பற்றியும் அமைச்சரவை விவகாரமும்
செங்கோட்டையன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை என்றுமே மதித்ததில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி, "செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்" என கூறினார். மேலும், தனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்காகச் செங்கோட்டையன் கண்ணீர் வடித்ததாக அவர் தெரிவித்தார்.
புகார்களும் ஆதாரங்களும்
செங்கோட்டையன் மீது அவரது குடும்ப உறுப்பினர்களே புகார் அளித்ததன் பின்னணியிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த காலத்திலேயே செங்கோட்டையனுக்கு எதிரான பல ஆதாரங்களைத் தான் சேகரித்து வைத்துள்ளதாக எச்சரித்தார். முத்துசாமி போன்ற தலைவர்கள் அதிமுகவை விட்டுச் சென்றதற்குக் காரணமே செங்கோட்டையனின் வளர்ச்சியைத் தடுக்கும் குணம் தான் என்றும், ஜெயலலிதா மறைவிற்குப் பின் கட்சியை உடைக்க முயன்றவர்களுக்கு அவர் துணை போனதாகவும் சாடினார்.

LIVE 24 X 7