தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தத் தேர்தலில், அக்கட்சிக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் அக்கட்சியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தான் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதைச் செல்போனில் வீடியோ எடுத்து அதனைச் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவேற்றியுள்ளார். வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பலரும் ஆர்வ மிகுதியால் தங்களது செல்போன்களைத் திருட்டுத்தனமாக வாக்குச்சாவடிக்குள் எடுத்துச் சென்று, விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கடும் தடையையும் மீறி, இந்தத் தகவல்கள் வைரலாகி வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LIVE 24 X 7