அரசியல்

2016 சட்டப்பேரவை தேர்தல்: இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016 சட்டப்பேரவை தேர்தல்: இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Inbadurai
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று கூறி திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக வேட்பாளர் எம்.அப்பாவு தொடர்ந்த இந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ததன் அடிப்படையில், திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நீதிபதி தனது தீர்ப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலின் 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கண்ட்ரோல் யூனிட்டுகளையும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.