உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் 50 வயது தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் கனவூஜியா (50) என்பவர் நள்ளிரவில் தனது வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் கோலு கனவூஜியா, தூங்கிக் கொண்டிருந்த தந்தை என்றும் பாராமல் கோடரியால் அவரைத் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். தாக்குதலுக்குப் பிறகு வீட்டின் கூரை மீது ஏறி நின்றுகொண்டு, "நான் என் தந்தையைக் கொன்றுவிட்டேன்" என்று கோலு கத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரம்மதேவைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
கைது செய்யப்பட்ட கோலுவிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அவர் தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்தத் திருமண விவகாரம் தந்தை மற்றும் மகனுக்கு இடையே நீண்ட நாட்களாகப் பெரும் குடும்பப் பிரச்சினையாக நீடித்து வந்துள்ளது. மேலும், கோலுவின் தாய் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலையாளி கோலு கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக அவர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கோரக்பூர் போலீஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

LIVE 24 X 7