தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதிகளை அவர்களின் குகைக்குள் சென்று தாக்கியதாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு இல்லை என்ற நிலையை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும், நாம் கொடுக்கும் பதிலடி அவர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முப்படைகளும் தங்களின் பராக்கிரமத்தை பாகிஸ்தானுக்கு காட்டியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்திற்கு ஆதரவாக நின்றதைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சியதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியர்களையும் இந்திய எல்லையையும் தொட நினைப்பவர்களுக்கு அழிவு மட்டும்தான் முடிவு எனவும் பிரதமர் சூளுரைத்தார். பயங்கரவாததை ஒழிப்பதே இந்தியாவின் இலக்கு என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு புதிய லட்சுமண ரேகையை இந்தியா உருவாக்கியுள்ளதாக கூறினார்.
பயங்கரவாதிகளும், அவர்களுக்கு புகழிடம் அளிப்பவர்களும் இந்தியாவின் பார்வையில் ஒரே மாதிரி தான் என்று கூறிய பிரதமர் மோடி, அணு ஆயுத பூச்சாண்டிக்கெல்லாம் இனி இந்தியா பயப்படாது, பயங்கரவாதிகள் மீது இஷ்டம் போல் தாக்குதல் நடத்துவோம் என்றார். ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், அதன் முன்பே நின்று பிரதமர் மோடி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









