முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை வரும் 23ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை வரும் 23ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ரூ.780 கோடி குத்தகை பாக்கி வைத்திருப்பதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
''பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
Kollidam river, death due to drowning in river, Thanjavur, Thirukkatupalli, கொள்ளிடம் ஆறு, ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி,
Actor Vijay Movie The GOAT Box Office Collection Report in Tamil : விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார்
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை முதலில் விடுதலை செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பாளர் டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து.. அது ரத்து செய்யப்பட்டால் அன்றே திமுக ஆட்சி கலைந்துவிடும் என கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.
நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைத்த பக்தர்கள்