வீடியோ ஸ்டோரி
இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.